/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
/
ராமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
ADDED : மே 22, 2024 06:59 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
கடந்த 11ம் தேதி பிடாரியம்மனுக்கு சாகை வார்த்தலும், கடந்த 19ம் தேதி இரவு பர்வதவர்தினி - ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது.
விழாவில் மணலிப்பட்டு சைவத் திருமடம் குருமுதல்வர் முன்னிலையில், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, பிரகாசம் ஆகியோர் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
விழாவில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தது.
விழா ஏற்பாடுகளை பிரகாசம் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

