/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
/
புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
புதுச்சேரியில் ரம்ஜான் கொண்டாட்டம்: பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ADDED : ஏப் 12, 2024 04:35 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகையொட்டி, மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின், ஐந்து கடமைகளில் புனித ரம்ஜான் மாதத்தில், நோன்பு கடை பிடிப்பது, முக்கியமானது. இஸ்லாமிய காலண்டரில், 9வது மாதம் ரம்ஜான் மாதமாகும். ஆண்டு தோறும் இந்த மாதத்தில், பிறை தொடங்கிய நாளில் இருந்து, இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடை பிடிப்பர்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ரம்ஜான் துவங்கி ஒரு மாத காலம், இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இந்த ஒரு மாத நோன்பு முடிவடைந்ததையொட்டி, புதுச்சேரி முழுவதும் இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர்.
அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். இதேபோல, புதுச்சேரியில் உள்ள முல்லா வீதி பள்ளி வாசல், அகமதியா பள்ளி வாசல், நெல்லித்தோப்பு பள்ளி வாசல், சுல்தானியா பள்ளி வாசல் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களிலும், சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.