sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இண்டியா கூட்டணியில் ரங்கசாமி இருப்பார்: பா.ஜ., எம்.எல்.ஏ., அமைச்சருடன் நாஜிம் எம்.எல்.ஏ., விவாதம்

/

இண்டியா கூட்டணியில் ரங்கசாமி இருப்பார்: பா.ஜ., எம்.எல்.ஏ., அமைச்சருடன் நாஜிம் எம்.எல்.ஏ., விவாதம்

இண்டியா கூட்டணியில் ரங்கசாமி இருப்பார்: பா.ஜ., எம்.எல்.ஏ., அமைச்சருடன் நாஜிம் எம்.எல்.ஏ., விவாதம்

இண்டியா கூட்டணியில் ரங்கசாமி இருப்பார்: பா.ஜ., எம்.எல்.ஏ., அமைச்சருடன் நாஜிம் எம்.எல்.ஏ., விவாதம்


ADDED : ஆக 06, 2024 07:10 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கூட்டணி குறித்து பா.ஜ., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. நாஜிம் எம்.எல்.ஏ., பேசியதாவது:

மாநில கவர்னர்கள் தனி நிர்வாகம் செய்கின்றனர். கவர்னர் மல்கானி போன்றோர் சிறப்பாக செயல்பட்டனர். அதன்பிறகு வந்த கட்டாரியாவால் பிளவு ஏற்பட்டது. கவர்னர் கிரண்பேடியால் நிர்வாகம் சீர்குலைந்தது.

சபாநாயகர் செல்வம்: கவர்னர் மட்டும் அதற்கு காரணம் கிடையாது. ஆளும் அரசு இணக்கமாக செயல்படவில்லை. அமைச்சர்கள் கோப்புகள் உடனுக்குடன் கையெழுத்தானது.

நாஜிம்-: கிரண்பேடியுடன் எப்படி இணக்கமாக செயல்படமுடியும்.

சபாநாயகர் செல்வம்: எந்த கோப்பாக இருந்தாலும் மத்திய அரசுக்கு அனுப்பிய காரணத்தால் தொய்வு ஏற்பட்டது.

நாஜிம்: தற்போதைய ஆட்சியில் கூட கல்வி அமைச்சர் அனுப்பிய கோப்பு கவர்னர் நீக்கினார். ரேஷன் கடை திறக்க முதல்வர் அனுப்பிய தீர்மானம் கவர்னர் நிறுத்தி வைத்திருந்தார்.

சபாநாகர் செல்வம்: கடந்த ஆட்சியாளர்கள் அதிகாரத்தை உள்துறையிடம் தந்து விட்டனர்.

நாஜிம்: அதை மீட்டு எடுத்து வாருங்கள் என்று கூறியதுடன், முதல்வர் குறித்து பாராட்டு தெரிவித்தார்.

கல்யாணசுந்தரம்-: ஒரே கூட்டணியில் உள்ள முதல்வரை உயர்த்தி பேசுவதும், பா.ஜ.,வை விமர்சிப்பது உங்களின் நோக்கம் என்ன. நீங்கள் எந்த கூட்டணியில் உள்ளீர்கள். என்.ஆர்., உடன் கூட்டணி அமைக்கிறீர்களா.

சபாநாயகர் செல்வம்: என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணியா,உங்கள்- நிலைப்பாடு சொல்லுங்கள்.

நாஜிம்: பா.ஜ., என்ற ஆக்டோபஸிடம் இருந்து முதல்வரை காப்போம்.

சபாநாயகர் செல்வம்: இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்.

நாஜிம்: பொருத்திருந்து பாருங்கள். இண்டியா கூட்டணியில் என்.ஆர்., இருப்பார். கண்டிப்பாக ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்.

நாஜிம்: யார் யார் எங்கு இருந்தார்கள் என விளக்கம் சொல்ல வேண்டி வரும். பா.ஜ., கட்சியின் மீது கோபம் இல்லை. சிந்தாந்தம் தான் சந்தேகம் எழுப்புகிறது.

அசோக்பாபு: உங்கள் தந்திரம் பலிக்காது.

நமச்சிவாயம்: உங்கள் ஆட்சியை கவிழ்த்தது காங்., ஆனால், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என நீங்கள் கூறினீர்கள்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்-; பா.ஜ., ஆட்சியில் தி.மு.க., வளர்த்து கொண்டது. ஜானகிராமன் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ., ஆட்சி தான் இருந்தது.

செந்தில்குமார்: கல்யாணசுந்தரம் 7 எம்.எல்.ஏ.,க்களுடன் த்ரில்லர் படம் எடுக்க போய், காமெடி படம் எடுத்துள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்:- தி.மு.க.,வின் கனவு பலிக்காது.






      Dinamalar
      Follow us