ADDED : மே 08, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 13ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்கிறார்.
புதுச்சேரி சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரங்கசாமி நேற்று மாலை கவர்னரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
பின் அவர், கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., – அ.தி.மு.க., – ல.ஜ.க., மற்றும் என்.ஆர்.காங்., சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒருமனதாக சட்டசபை தலைவராக என்னை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை கொடுத்து இருக்கிறோம். தே.ஜ., கூட்டணி அரசின் ஆட்சி மீண்டும் அமைக்கிறது. வரும் 13ம் தேதி பதவி ஏற்கிறேன். அமைச்சர் பதவி ஏற்பது குறித்து பிறகு கூறகிறேன்’ என்றார்.
