/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2026ல் மீண்டும் ரங்கசாமி முதல்வர்
/
2026ல் மீண்டும் ரங்கசாமி முதல்வர்
ADDED : பிப் 24, 2025 04:31 AM
புதுச்சேரி : நாராயணசாமியின் ஆட்சி அவலங்களை உணர்ந்த மக்கள், மீண்டும் காங்., கட்சிக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என, சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபையில், நேற்று காகிதமில்லா நடைமுறை குறித்த பயிற்சி முகாம் துவங்கியது.இதில், பங்கேற்ற சபாநாயகர் செல்வம் கூறியதாவது:
புதுச்சேரியில், கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரை எந்த நலத்திட்டப்பணிகளும் நடக்கவில்லை. தீபாவளி பண்டிகைக்கு, சர்க்கரைக்காக ரூ.72 மட்டுமே ஆட்சியாளர்கள் வழங்கியதெல்லாம் மக்கள் இன்னமும் மறக்கவில்லை.
ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சாலைகள், உள் கட்டமைப்புகள், முதியோர் உதவி தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை என நல உதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 கோடிக்கு தொடர்ந்து தடையில்லாமல் மக்கள் நல திட்டப்பணிகள் நடக்கிறது. இதுபோன்ற சூழலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியின் அவலங்களை கண்டுணர்ந்த மக்கள், திரும்பவும் காங்., கட்சிக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள்.
வரும் 2026ம் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாராக ரங்கசாமியே இருப்பார். மீண்டும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

