/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து
/
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து
ADDED : ஜூன் 20, 2024 09:11 PM
புதுச்சேரி: ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாள் கொண்டாடிய ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,தங்களுக்கு புதுச்சேரி மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும்,மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.அது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
கடவுள் உங்களுக்கு, இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்கி தேசத்திற்கு சேவை செய்ய அருள்புரியட்டும் என கூறப்பட்டுள்ளது.