/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லஞ்சம் பெற்றுக்கொண்டு ரேஷன்கார்டு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

ADDED : ஆக 13, 2024 05:00 AM
புதுச்சேரி: லஞ்சம் பெற்றுக்கொண்டு ரேஷன்கார்டு வழங்கப்படுகிறது என லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானிய கோரிக்கையின்போது லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
பாகூர் ஏரி, கோர்க்காடு ஏரி, கரிக்கலாம் பாக்கம் ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, ஊசுட்டேரி போன்ற நீர் நிலைகளை கொள்ளவை அதிகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க வேண்டும். கால்நடை, காய்கறி உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏம்பலத்தில் வார சந்தை ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித் துறையின் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் 2 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை உடனடியாக ஒதுக்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சிறப்பு நிதியாக தொகுதி ஒன்றிற்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்பாகவே உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை போன்ற எம்.எல்.ஏக்கள் பரிந்துரை இல்லாமல் நேரடியாக தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிவப்பு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதிகாரிகள் துணையோடு தான் நடக்கின்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.