/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் வாசிப்பு திருவிழா
/
அரசு பள்ளியில் வாசிப்பு திருவிழா
ADDED : பிப் 15, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கருவடிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் வாசிப்பு திருவிழா நடந்தது.
தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் நிர்மலாதேவி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் விஜயலட்சுமி, பத்மாவதி, கிரிதரணி, சரண்யா, பாரதிதாசன், பழனி, முன் மழலையர் ஆசிரியைகள் தேவி, கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை 210 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பல் வேறு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.