/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏலச்சீட்டில் ரூ. 5 கோடி மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை

ADDED : மார் 10, 2025 06:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ரூ. 5 கோடி ஏலச்சீட்டு மோசடி வழக்கை, சி.பி.சி.ஐ.,டி.,க்கு மாற்ற, டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நெல்லித்தோப்பு ரயில்வே பாலம் அருகில் ஜே.பி., சிட்ஸ் பண்ட்ஸ் பெயரில் பிலோமினா என்பவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர், ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு, பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இவரிடம் 15க்கும் மேற்பட்டோர், பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டோர், கொடுத்த புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார், பிலோமினா, அவரது கணவர் பியர்ஜான் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். விசாரணையில், பிலோமினா, பலரை ஏமாற்றி 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திருப்பி தராமல் மோசடி செய்ததும், அதற்கு கவர்னர் மாளிகையில் டிரைவாக வேலை செய்த சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன், உதவியாக இருந்ததும் தெரிய வந்தது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட சிற்றரசன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 5 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால், வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற, முதலியார்பேட்டை போலீசார், டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்துள்ளனர்.