/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசிடென்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை
/
பிரசிடென்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை
பிரசிடென்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை
பிரசிடென்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை
ADDED : மே 07, 2024 04:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியில் தேர்வு எழுதிய 343 மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஷாலினிதேவி 593 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடத்தையும், பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் பாடவாரியாக மொழிப்பாடம் 99, ஆங்கிலம் 95, வணிகவியல் 100, பொருளியியல் 99, கணக்கு பதிவியியல் 100, வணிக கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவி அபிராமி 590 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
இவர், பாடவாரியாக மொழிப்பாடம் 99, ஆங்கிலம் 96, வணிகவியல் 100, பொருளியியல் 97, கணக்கு பதிவியல் 100, வணிக கணிதம் 98 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் பாரத்ராஜ் 584 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இவர், பாடவாரியாக மொழிப்பாடம் 98, ஆங்கிலம் 92, வணிகவியல் 98, பொருளியியல் 97, கணக்கு பதிவியல் 100, கணினி பயன்பாடு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மேலும் மூன்று மாணவர்கள் பிரெஞ்சு பாடத்திலும், கணிதத்தில் ஒருவர், கம்பியூட்டர் சயின்ஸ் 9 பேர், வணிகவியலில் 4, கணக்கு பதிவியல் 5, கணினி பயன்பாட்டில் 2, வணிக கணிதத்தில் ஒருவர், தணிக்கை பாடத்தில் 26 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் கிருஷ்டி ராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாழ்த்தி இனிப்பு வழங்கி பாராட்டினர்.