sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கரும்பு கட்டுக்கழிவு குறைப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

/

கரும்பு கட்டுக்கழிவு குறைப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

கரும்பு கட்டுக்கழிவு குறைப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

கரும்பு கட்டுக்கழிவு குறைப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி


ADDED : ஆக 20, 2024 05:06 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அதிரடி நவடிக்கையால் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை, கரும்பு கட்டுக்கழிவை 1 சதவீதமாக குறைத்தற்கு, கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நெல்லிக்குப்பம், ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், 2021-2022ம் ஆண்டு சக்கரை பருவத்தில் சோலை கழிவை திடீரென, ஒரு சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை பிடித்தம் செய்தது. ஆனால் கரும்பு சட்டம் டன் ஒன்றிற்கு ஒரு சதவீதம் தான் கட்டுக் கழிவு பிடித்தம் செய்ய வேண்டும் என்று விதி உள்ளது. நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் இச்செயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் 2 சர்க்கரை ஆலைகளும் இயங்காதால், இங்கிருந்து கரும்புகள் நெல்லிக்குப்பம் மற்றும் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு எடுத்துச்செல்ல, 2021ம் ஆண்டு நவ.,13ம் தேதி புதுச்சேரி கரும்பு ஆணையர் உத்தரவிட்டார்.

புதுச்சேரி கரும்பு ஆணை யரின் இந்த முடிவை, கரும்பு விவசாயிகள் ஒருங் கிணைப்பு குழு வன்மையாக கண்டித்தது. உத்த ரவை ரத்து செய்யக்கோரி, புதுச்சேரி முதல்வர், வேளாண் அமைச்சர், வேளாண்துறை செயலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பை நாங்கள் எடுத்துச் செல்ல மாட்டோம் என்று விவசாயிகள் கரும்பு வெட்டுவதை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், புதுச்சேரி பகுதியை பொதுப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரி முதல்வர் நிறைவேற்றினார். அதன் பிறகு ஈஐடி., சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு சட்டத்தின்படி ஒரு சதவீதம் சோலைக் கழிவை பின்பற்றுகிறோம் என்று உத்தர வாதம் அளித்தது.

தற்போது, அதிகமாக பிடித்தம் செய்த சோலை கழிவுக்கு உண்டான பணத்தை விவசாயிகளிடம் திருப்பி அனுப்பி விட்டோம் என தெரிவித்துள்ளார்கள். இது ஒன்றுபட்ட விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்த வெற்றிக்கு காரணமான புதுச்சேரி முதல்வர், வேளாண் துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us