மாவட்ட அளவில் யோகா போட்டி 24ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்
மாவட்ட அளவில் யோகா போட்டி 24ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்
ADDED : ஜூன் 17, 2026 05:22 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மாவட்ட அளவிலான யோகாசன விளையாட்டு திறந்தநிலை சாம்பியன்ஷிப் போட்டி வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில் நடக்கிறது.
சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு வீரர்களை தயார் செய்திடும் பொருட்டு, வரும் 27 மற்றும் 28 ம் தேதிகளில், லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் மாவட்ட அவளிலான போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில், புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்களாம்.
போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்டோர், 14, 18, 28, 35, 45, 55 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய 7 பிரிவுகளில் நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 97892 10593 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். அல்லது https://tinyurl.com/PDYSC2026 என்ற இணைய முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வரும் 24ம் தேதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்.
