/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவப் படிப்புகளுக்கு இறுதிப்பட்டியல் வெளியீடு
/
மருத்துவப் படிப்புகளுக்கு இறுதிப்பட்டியல் வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கு இறுதிப்பட்டியல் வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கு இறுதிப்பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 31, 2024 02:40 AM
புதுச்சேரி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக்கில் நீட் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் www.centacpuducherry.in வெளியிடப்பட்டு, இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் கடந்த 20ந் தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பததாரர்கள் ஆட்சேபனைகள் கேட்கப்பட்டு கடந்த 23ம் தேதி திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று இறுதி தரவரிசை பட்டியல் மற்றும் வரைவு சீட் இடஒதுக்கீடு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் ஏதேனும் அட்சேபணை இருந்தால் இன்று இரவு ௮ மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.
இடம் கிடைத்தவர்கள் ௨ம் தேதி முதல் ௫ம் தேதி மாலை ௬ மணிக்குள்அசல் சான்றிதழ்களுடன் சம்பந் தப்பட்ட கல்லுாரியில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள் ளார்.