/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலை எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
புதுச்சேரி பல்கலை எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
புதுச்சேரி பல்கலை எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
புதுச்சேரி பல்கலை எதிரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : செப் 11, 2024 02:11 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலை எதிரில் ஆக்கிரமிப்பு கடைகளை வருவாய்த்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின், 2,வது மெயின் கேட் எதிரில், ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.
இந்த பகுதியில் சாலைகளை ஆக்ரமித்து பல்வேறு கடைகள் முளைப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனால் சாலை குறுகலாகி, வாகன நெரிசலும் விபத்து அபாயமும் பன்மடங்காக அதிகரித்து வருகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள், உழவர்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றன. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் அகற்றினர். மேலும் அங்கு சாலை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

