/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இட ஒதுக்கீட்டை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: கென்னடி
/
இட ஒதுக்கீட்டை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: கென்னடி
இட ஒதுக்கீட்டை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: கென்னடி
இட ஒதுக்கீட்டை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: கென்னடி
ADDED : ஜூலை 26, 2024 04:16 AM
புதுச்சேரி,: 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்' என தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2022ம் ஆண்டில் பல்வேறு தேதிகளில், சப் இன்ஸ்பெக்டர், துறைமுக இளநிலை பொறியாளர், வேளாண் அதிகாரி, தொழில்துறை தொழில்நுட்ப அதிகாரி, புள்ளியல் துறை ஆய்வாளர், போக்குவரத்து துறை இளநிலை பொறியாளர் மற்றும் உதவி வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 180 சான்றிதழ் பெறாத குரூப் பி பணியிடங்களை நிரப்புவதற்காக புதுச்சேரி அரசால் அறிவிப்பானை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பாணை மிகவும் பின்தங்கிய வகுப்பினரான வன்னியர், சலவையாளர், நாவிதர், குயவர், ஏரகுலா, மிகமிக பின்தங்கிய மக்களான மீனவர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனித் தனியாக ஏற்கனவே இருந்த இடப்பகிர்வு உரிமையை பாதிக்கும் வகையில் இருந்தது.
இதனை எதிர்த்து தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி எம்.பி.சி., ஓ.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., ஆகிய பிரிவினருக்கு தனித்தனியான இடம் பகிர்வு உரிமை மீண்டும் சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டது.
இந்த உரிமையை நசுக்கும் வகையில் தற்போது சார்புநிலை செயலர் கையொப்பமிட்டு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
சமூக நீதியை குறைக்கும் இந்த ஆணையை ரத்து செய்து, புதிய அறிவிப்பாணை வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.