/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க கோரிக்கை
/
அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க கோரிக்கை
அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க கோரிக்கை
அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பள பாக்கியை வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
புதுச்சேரி : அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 5 ஆண்டு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண் டும் என ஏ.ஐ.யு.டி.யு.சி., வலியுறுத்தி உள்ளது.
ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற் சங்க மாநில குழு கூட்டம் மாநில தலைவர் சங்கரன் தலைமையில் நடந்தது.
மாநில செயலாளர் சிவக்குமார், பொருளாளர் முத்து, கமிட்டி உறுப்பினர்கள் வெங்கடேசன், அகில இந்திய நிர்வாக குழு உறுப்பினர் அனவரதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, கூட்டுறவு நிறுவனங்கள், பாண்டெக்ஸ், அமுதசுரபி உள்ளிட்ட வற்றில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க அரசிடம் மனு அளித்தும் வழங்கவில்லை.
வருமானம் இன்றி பல தொழிலாளர்கள் வறுமையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே, 5 ஆண்டு நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மின் துறையை தனியார்மய மாக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும்.ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்.
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.