/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூங்காக்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
பூங்காக்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மே 05, 2024 03:55 AM
: புதுச்சேரியில் அனைத்து பூங்காக்களிலும், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, தேசிய இளைஞர் திட்ட மாநில செயலாளர் ஆதவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை;
அக்னி வெயில் துவங்கி உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும், நகராட்சி சார்பில், பொது மக்களின் வசதிக்காக குடிநீர் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இளைஞர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உதவியையும், ஆலோசனை களையும் பெற்று, அதற்கான ஏற்பாடுகளை எளிதாக நடைமுறைப்படுத்தலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள தால், புதுச்சேரி அரசின் சார்பில், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் வெயில் தாக்கத்தினால் டாக்டர்களும், அதிகமாக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தி வருவதால், விரைவாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், புதுச்சேரி பாரதி பூங்கா, கருவடிக்குப்பம் பூங்கா, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்கா, புதுச்சேரி தமிழ்ச்சங்கம் எதிரில் உள்ள வெங்கட்டா நகர் பூங்காக்களில் உடைந்து போய் பராமரிப்பின்றி, பழுதாகி கிடக்கும் விளையாட்டு உபகரணங்களையும், பொருட்களையும் சீரமைத்து கோடை காலத்தில் மாலைப்பொழுதில், குழந்தைகள் விளையாடவும், பெரியோர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடை மேடைகளை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.