ADDED : ஜூலை 13, 2026 08:40 PM
புதுச்சேரி: ரெயின்போ நகர் பகுதியில் வாய்க்காலின் குறுக்கே செல்லும் புதைவட மின் இணைப்புகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி ரெயின்போ நகர், 8வது கிராசில், கழிவு நீர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் மழைக்காலங்களில், தண்ணீரில் அடித்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அடைத்துக் கொள்கின்றன. இந்த வாய்க்காலின் குறுக்கே புதைவட மின் இணைப்புகள் செல்கின்றன.
இதனால் துாய்மை பணியாளர்கள் ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும், உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். மேலும் மின் துறையை தொடர்பு கொண்டு மின் இணைப்பை துண்டித்த பிறகுதான், துாய்மை பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவு செல்லும் போது, மின் கசிவு ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது.எனவே, ரெயின்போ நகர் பகுதியில், வாய்க்கால் குறுக்கே செல்லும் புதைவட மின் பாதையை மாற்று வழியில் செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
