/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்க கோரிக்கை
/
காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்க கோரிக்கை
காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்க கோரிக்கை
காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் துவங்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2024 09:23 AM
புதுச்சேரி : புதுச்சேரி காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.பி.என்., காவலர் விஜயகுமார் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
புதுச்சேரி போலீஸ் துறையில் பணி புரியும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் வீட்டு மனைகள் மற்றும் சொந்தமாக வீடுகள் வாங்கி பயன்பெறும் வகையில்
இந்த சங்கம் கடந்த 2007 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அதன் பின்னர் செயல் படாமல் முடக்கப்பட்டது. மற்ற மாநில காவல் துறையில் பணிபுரியும் காவலர் நலனுக்காக, காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில், அனைத்து பொதுத் துறைகளிலும், பணிபுரியும் ஊழியர்கள் நலனுக்காக கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் என்ற பெயரில் 36 சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
காவல் துறையில் பணி புரியும் காவலர்கள் நலனுக்காகவும்,மேம்பாட்டுகாகவும், காவலர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.