/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காப்பகத்தில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகள் மீட்பு
/
காப்பகத்தில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகள் மீட்பு
காப்பகத்தில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகள் மீட்பு
காப்பகத்தில் இருந்து தப்பிய இரண்டு சிறுமிகள் மீட்பு
ADDED : செப் 03, 2024 06:30 AM
அரியாங்குப்பம் : தனியார் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய இரண்டு சிறுமிகளை போலீசார் மீட்டு மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் பாலியல் சம்பவத்தால் இரு சிறுமிகள் பாதிக்கப்ட்டடனர். பெற்றோரின் விருப்பத்தின் பேரில், இரண்டு சிறுமிகளை போலீசார் தனித்தனியாக கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, தவளக்குப்பத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அதனையடுத்து, இரண்டு சிறுமிகளும், நேற்று முன்தினம், காப்பகத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இரண்டு சிறுமிகளும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த, காப்பக நிறுவாகத்தினர் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இரண்டு சிறுமிகளை போலீசார் நேற்று புதுச்சேரியில் மீட்டனர். அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோர்ட் உத்தரவின் பேரில், இரு சிறுமிகளையும் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.