/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்டோ பார்கள் திறக்க எதிர்ப்பு
/
ரெஸ்டோ பார்கள் திறக்க எதிர்ப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:31 AM

புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் குடியிருப்பு மத்தியில் ரெஸ்ட்ரோ பார்கள் திறக்க அனுமதி வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2 மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், உழவர்கரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் மதுக்கடை முன், திரண்டனர்.
பின் வக்கீல் சசிபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் உழவர்கரை தொகுதியில் மேலும் 2 மதுக்கடைக்கும், ரெஸ்டோ பார்களை திறக்க அரசு அனுமதித்தை கண்டித்தும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 7 மதுக்கடைகள், 2 ரெஸ்டோ பார்களை மூடக்கோரி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.