/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை
/
ஒய்வு பெற்ற அரசு ஊழியர் தற்கொலை
ADDED : ஜூலை 02, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுாரில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் வி.சி.பி. குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி, 65, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட குப்புசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் துாங்கிய நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கேட்டில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.