/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கு பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கொன்றது அம்பலம்
/
ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கு பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கொன்றது அம்பலம்
ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கு பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கொன்றது அம்பலம்
ரிக் ஷா தொழிலாளி கொலை வழக்கு பீடி கொடுக்காத ஆத்திரத்தில் கொன்றது அம்பலம்
ADDED : ஜூலை 06, 2024 04:23 AM
புதுச்சேரி: பீடி கொடுக்காத கோபத்தில் சைக்கிள் ரிக் ஷா தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 60; சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழிலாளி. கண் பார்வை பாதிக்கப்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக சைக்கிள் ரிக் ஷா ஓட்டாமல், செஞ்சி சாலையோரத்தில் தங்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் அதிகாலை செஞ்சி சாலை, பழைய சட்டக் கல்லுாரி பின்புற பிளாட்பாரத்தில் தலையில் கான்கரீட் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், நெட்டபாக்கம், அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சித்தானந்தன்,37; முருகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், சித்தானந்தனை பிடித்து விசாரித்தனர். அதில் வீட்டை விட்டு வெளியேறி, நகர பகுதியில் சுற்றித் திரிந்து வந்த சித்தானந்தன் பிளாட்பாரத்தில் படுத்திருந்த முருகனை எழுப்பி பீடி கேட்டுள்ளார்.
முருகன் தரமறுத்து மீண்டும் துாங்கியுள்ளார். ஆத்திரமடைவந்த சித்தானந்தன் அருகில் கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து முருகன் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சித்தானந்தனை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சித்தானந்தனை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து சித்தானந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.