பஸ் நிலையத்தில் துாங்கியவரிடம் மோதிரம் திருட்டு: மர்ம நபருக்கு வலை
பஸ் நிலையத்தில் துாங்கியவரிடம் மோதிரம் திருட்டு: மர்ம நபருக்கு வலை
ADDED : மே 11, 2026 06:30 PM
புதுச்சேரி: பஸ் நிலையத்தில் துாங்கியவரிடம் 6 கிராம் மோதிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி ராட்டை சேர்ந்தவ துரைப்பாண்டி,50; மதுரை அண்ணா பல்கலையில் லேப் அசிஸ்டெண்டாக வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் காதணி விழாவிற்காக, நாகப்பட்டினத்தில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு, அன்று இரவு திண்டிவனம் செல்ல தனது மைத்துனருடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
அதனையொட்டி, துரையாண்டியும், அவரது மைத்துனரும் பஸ் நிலையத்தில் உள்ள வராண்டாவில் படுத்து துாங்கியுள்ளனர். சற்று நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, துரைபாண்டி கை விரலில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள 2 மோதிரங்களை காணவில்லை.
துரைப்பாண்டி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
