/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீடராஜப்பர் வீதியில் சாலை ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
நீடராஜப்பர் வீதியில் சாலை ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
நீடராஜப்பர் வீதியில் சாலை ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
நீடராஜப்பர் வீதியில் சாலை ஆக்கிரமிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மே 27, 2024 05:20 AM

புதுச்சேரி: புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரின் முக்கிய சாலைகளில், ஆக்ரமிப்பாளர்களால், வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்பவர்களும், பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சமீபகாலமாக நீடராஜப்பர் வீதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அந்த பகுதியை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்கு சவரிராயலு அரசு பெண்கள் பள்ளி நுழைவு வாயில் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஜல்லிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், கட்டுமான பணிகளுக்காக, இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல, அங்கு பல்வேறு இரு சக்கர, நான்கு சக்கர வானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

