/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1.77 கோடியில் சாலைப் பணி: முதல்வர் துவக்கி வைப்பு
/
ரூ.1.77 கோடியில் சாலைப் பணி: முதல்வர் துவக்கி வைப்பு
ரூ.1.77 கோடியில் சாலைப் பணி: முதல்வர் துவக்கி வைப்பு
ரூ.1.77 கோடியில் சாலைப் பணி: முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : செப் 07, 2024 07:05 AM

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் சாலை மேம்பாட்டு பணிகள் 1.77 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டது.
இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அணுகு சாலை, இரண்டு பிரதான சாலைகள், 1வது, 9வது, 11வது, 15வது, 19வது மற்றும் 25-வது குறுக்கு சாலைகளில் தார்ச்சாலைகள் மற்றும் வடிகால் வசதிகள் அமைத்தல் பணிகள் 1 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 633 ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிகள் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மேம்பாட்டு பணிகளை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.