sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்


ADDED : ஜூன் 08, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2024 04:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் - கரியமாணிக்கம் சாலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

நெட்டப்பாக்கம் - கரியமாணிக்கம், மதகடிப்பட்டு சாலை போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது. சாலை ஒரங்களில் ஆக்கிரமித்து பேனர்கள் ெஷட்டு அமைக்கப்பட்டு கடைகள் நடத்தி வருவதால், அடிக்கடி விபத்து நடந்து வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் பாகூர் தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலையில் நேற்று காலை 10:00 மணியளவில் கரியமாணிக்கம் - நெட்டப்பாக்கம் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கட்டியிருந்த கடைகள், பேனர்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.

நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்னர்.

கடை பேனர்களை சாலையோரம் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

பொதுப்பணிததுறை பொறியாளர் கிருஷ்ணன், கொம்யூன் பஞ்சாயத்து செயற்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us