/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோரம் கழிவுநீர் குளம் அரியூர் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் கழிவுநீர் குளம் அரியூர் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கழிவுநீர் குளம் அரியூர் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் கழிவுநீர் குளம் அரியூர் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : மே 06, 2024 05:37 AM

புதுச்சேரி, நான்கு வழிச்சாலை வாய்க்கால் கழிவுநீரால் அரியூரில் புதிதாக கழிவுநீர் குளம் உருவாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணியில், அரியூர் கிராமத்தில் சர்வீஸ் சாலையோரமாக மூடிய ப வடிவ வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
சாலையோர குடியிருப்புகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து தினசரி வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் சென்று சேர்கிறது.
நான்கு வழிச்சாலை வாய்க்காலில் சேரும் கழிவுநீரை வெளியேற்ற சரியான திட்டமிடல் இல்லை. இதனால், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரிக்கு எதிர்பக்கத்தில் உள்ள காலி இடத்தில், கழிவுநீர் வாய்க்கால் திறந்து விடப்பட்டுள்ளது.
சாலையோர வாய்க்காலில் வரும் கழிவுநீர் நிலப் பகுதியில் தேங்கி நிற்கிறது.
பல மாதங்களாக இதுபோல் கழிவுநீர் வெளியேறி வந்ததால், காலி நிலப்பகுதியில் புதிதாக கழிவுநீர் குளமே உருவாகி விட்டது.
சாலையோரம் உருவாகி உள்ள கழிவுநீர் குளத்தால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
நில பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இணைப்பை அடைத்து, வாய்க்காலில் வரும் கழிவுநீரை வெளியேற்ற சரியான திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) உருவாக்க வேண்டும்.