/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஊர்வலம்
ADDED : ஆக 08, 2024 11:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
சங்க தலைவர் அழுகர் ராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வடிவேல், பொருளாளர் வீரமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாநில தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனுவாசன், துணை தலைவர் கொளஞ்சியப்பன், மதிவாணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிர்வாகிகள், சூரியன், ராமசாமி, முருகன், சேவியர், உழவர்கரை நகராட்சி சாலையோர விற்பனை குழு உறுப்பினர்கள், தனசேகரன், ரகுபதி, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலையோர வியாபாரிகள் மீது வழக்கு பதிவதை நிறுத்தி வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலையோர வியாபாரத்தை தடுக்க கூடாது. வியாபாரிகள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியத்திற்கு நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரில் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலம் ராஜா தியேட்டரில் துவங்கி நேரு வீதி வழியாக சென்று சட்டசபை அருகே முடிந்தது.