/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணின் கம்மலை பறித்த ரவுடி கைது
/
பெண்ணின் கம்மலை பறித்த ரவுடி கைது
ADDED : மார் 04, 2025 09:48 PM
புதுச்சேரி : வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி, கம்மலை பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி திலகர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பழனி. இவரது மனைவி பரமேஸ்வரி, 48; இவர்களது பக்கத்து வீட்டில் வைத்திக்குப்பத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் ஏழுமலை (எ) மணிபாரதி. 20; தனது தாயுடன் கடந்த சில மாதத்திற்கு முன்பு குடிவந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் உள்ளே புகுந்த மணிபாரதி, பரமேஸ்வரியை தாக்கி, அவர் அணிந்திருந்த 3 கிராம் கம்மலை பறித்துச் சென்றார்.
பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் டி.நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து, மணிபாரதியை தேடி வந்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், லாஸ்பேட்டை நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த மணிபாரதியை போலீசார் கைது செய்து கம்மலை பறிமுதல் செய்தனர். மணிபாரதி மீது ஏற்கனவே கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.