/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெய்வேலியை சேர்ந்த ரவுடி குண்டா் சட்டத்தில் அடைப்பு
/
நெய்வேலியை சேர்ந்த ரவுடி குண்டா் சட்டத்தில் அடைப்பு
நெய்வேலியை சேர்ந்த ரவுடி குண்டா் சட்டத்தில் அடைப்பு
நெய்வேலியை சேர்ந்த ரவுடி குண்டா் சட்டத்தில் அடைப்பு
ADDED : ஏப் 28, 2024 04:12 AM

நெய்வேலி : நெய்வேலியில் பிரபல ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் -10 ஐ சேர்ந்தவர் சுப்ரமணி மகன் உத்தண்டராஜன்,29; பல்வேறு குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட இவர், கடந்த ஜூன் மாதம் நெய்வேலி மத்திய பஸ் நிலைய ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சொரத்துார் ராஜேந்திரனிடம் பணத்தை கொடுக்க கூறினார். அதற்கு அவர் மறுக்கவே, கட்டையால் அடித்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த உத்தண்டராஜன் கடந்த மார்ச் மாதம் கும்பகோணம் - சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறி, கண்டக்டரிடம் தகராறு செய்து தாக்கினார். மேலும், பஸ்சை கல்லால் தாக்கி சேதப்படுத்தினார்.
இவ்வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த உத்தண்டராஜன் கடந்த 14ம் தேதி சொரத்துார் சுரேஷ் என்பவரிடம் பணம் கேட்டு கத்தியால் தலையில் வெட்டினார். இதுகுறித்த டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து உத்தண்டராஜனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
அவரது குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, உத்தண்ட ராஜனை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள உத்தண்டராஜனிடம் டவுன்ஷிப் போலீசார் வழங்கினார்.

