/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோயாளிகள் 2,281 பேருக்கு ரூ.1.57 கோடி உதவித்தொகை
/
நோயாளிகள் 2,281 பேருக்கு ரூ.1.57 கோடி உதவித்தொகை
ADDED : ஜூலை 27, 2024 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் நோயினால் சிரமப்படும் நோயாளிகளுக்கு மொத்தம், ரூ.1.57 கோடி உதவித்தொகையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், 'தொடர் நோயினால் சிரமப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவிற்கான நிதி' உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் புதிய பயனாளிகள், 183 பேர் உட்பட, 2,281 பயனாளிகளுக்கு மொத்தம், ரூ.1.57 கோடி அளவிலான உதவித்தொகையை, முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டசபையில், தனது அலுவலகத்தில், நேற்று வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், துறை இயக்குநர் இளங்கோவன், துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் மற்றும் அதிகாரிகள், இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.