/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.13.99 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ.13.99 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 27, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேரிடம் 13.99 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லதா. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பதிக்கலாம் எனக் கூறினார். அதை நம்பி, அவர் 13.87 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
காரைக்காலை சேர்ந்த ஜெயவேல் என்பவரிடம் 8 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரசன்னாகுமார் என்பவரிடம் 4 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறி, அபகரித்துள்ளனர்.
புகார்களின் பேரில், சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.