/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 22 லட்சத்தில் திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ. 22 லட்சத்தில் திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : செப் 14, 2024 06:10 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டைதொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 22 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர், அரவிந்தர் கார்டன் ஆகிய பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சாலை அமைப்பது, பெருமாள் கோவில் வீதி செல்வ முதலியார் தோட்டம் வீதியில் 7 லட்சம் மதிப்பீல் சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டது.
இந்த பணியை பிரகாஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்வதற்கு வசதியாக படிக்கட்டு வேண்டி மீனவ பெண்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன் , உதவி பொறியாளர் பழனி ராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஊழியர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.