/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
7 பேரிடம் ரூ.22.28 லட்சம் மோசடி
/
7 பேரிடம் ரூ.22.28 லட்சம் மோசடி
ADDED : ஆக 25, 2024 05:45 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேரிடம் 22.28 லட்சம் ரூபாயை மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்தார்.
அதில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, தகவல் வந்தது. அதை நம்பி 7.27 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த ஜெயபாரதி, என்பவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை இருப்பதாக கூறினார். அதை நம்பிய அவர், 6.65 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
தட்டாஞ்சாவடியை பகுதியை சேர்ந்த பாலின் 1.11 லட்சம், ராஜ்குமார் 1.30 லட்சம், காமராஜர் சாலை அருள்மணி, 79 ஆயிரம், லாஸ்பேட்டை லட்சுமி 66 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தனர்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.