/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: கடலுாரில் 2 பெண்கள் கைது
/
300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: கடலுாரில் 2 பெண்கள் கைது
300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: கடலுாரில் 2 பெண்கள் கைது
300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: கடலுாரில் 2 பெண்கள் கைது
ADDED : ஜூன் 13, 2024 08:24 AM

கடலுார் : கடலுார் வில்வராயநத்தம் எம்.ஜி.கே. நகரை சேர்ந்தவர் திருச்செல்வம் மனைவி பாரதி,39; கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ரெஜினா.
இருவரும் பள்ளித் தோழிகள். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பாரதி வீட்டிற்கு சென்ற ரெஜினா, கும்பகோணத்தில் 'ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை கூட்டாக நடத்தி வருகிறோம்.
அதன் கிளை கடலுாரில் முதுநகரில் திறந்துள்ளோம். அங்கு, சித்திரைப்பேட்டை மனோகர் மனைவி சங்கீதா,45, தனது சகோதரர் ஜலேந்திரன், அவரது மனைவி சிந்துலாவண்யா ஆகியோர் வேலை செய்கின்றனர். நான் கடலுார் மாவட்டத்திற்கு ஏஜெண்டாக உள்ளேன். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், மாதம் 15 ஆயிரம் வீதம் 18 மாதம் வழங்கப்படும். பின்னர் அசலையும் திருப்பி தரப்படும் என்றார்.
அதனை நம்பிய பாரதி, கடந்த 21.3.2022ல் ரூ. 2 லட்சம் கொடுத்தார். அதற்கு ரெஜினா ரசீது வழங்கினார். மேலும், பெனிபிட் தொகை ரூ.30 ஆயிரம் கொடுத்தார். அதனால், மகிழ்ச்சி அடைந்த பாரதி, பல தவணையாக ரூ.15 லட்சம் செலுத்தினார்.
அதற்கு, பெனிபிட் தொகையை கொடுக்காமல் காலம் கடத்தியதால், பாரதி கட்டிய பணத்தை திரும்ப கேட்டும் தராமல் ரெஜினா காலம் கடத்தினார்.
சந்தேகமடைந்த பாரதி விசாரித்தபோது, இதேபோன்று சித்திரைப்பேட்டை, சாமியார்பேட்டை, தம்மனாம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, குமாரப்பேட்டை, நஞ்சுலிங்கம்பேட்டை, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் 300க்கும் மேற்பட்டோரிடம் ரூ.4 கோடி வசூலித்து மோசடி செய்துவிட்டு, கடந்த 2023ல் முதுநகர் அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவானது தெரிய வந்தது.
இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சண்முகவேலன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா பிரியா ஆகியோர் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட ரெஜினா, சங்கீதா, அர்ஜூன்கார்த்திக், ஜலேந்திரன், சிந்து லாவண்யா ஆகியோரை தேடிவந்தனர்.
அதில் கிடைத்த தகவலின்பேரில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த ரெஜினா மற்றும் சங்கீதா ஆகியோரை கைது செய்து, கடலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.