/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ.5.7 லட்சம் 'அபேஸ்'
/
2 பேரிடம் ரூ.5.7 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஏப் 07, 2024 04:55 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 2 பேரிடம் ரூ.5.7 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது டெலிகிராம் செயலி மூலம், வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் வந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். ஆன்லைன் மூலம் வேலை செய்ய முன்பணம் செலுத்த வேண்டும் என மர்ம நபர் தெரிவித்தார். அதை நம்பி ராஜசேகர் தனது வங்கி கணக்கில் இருந்து முன் பணமாக 2.33 லட்சம் அனுப்பி ஏமாந்தார்.
அதே போல், புதுச்சேரியை சேர்ந்த திலீப்குமார், என்பவரின் டெலிகிராம் மூலம் விளம்பரம் வந்தது. அதில், பகுதி நேர வேலை செய்தால், பணம் சம்பாதிக்கலாம் என இருந்தது. அதை நம்பி அவர், ரூ.3.37 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி ஏமாந்தார்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

