/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல் பிரமுகர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்; ஓட்டுக்கு பணம் கொடுத்த 4 பேர் கைது
/
அரசியல் பிரமுகர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்; ஓட்டுக்கு பணம் கொடுத்த 4 பேர் கைது
அரசியல் பிரமுகர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்; ஓட்டுக்கு பணம் கொடுத்த 4 பேர் கைது
அரசியல் பிரமுகர் வீட்டில் ரூ.64 லட்சம் பறிமுதல்; ஓட்டுக்கு பணம் கொடுத்த 4 பேர் கைது
ADDED : ஏப் 18, 2024 11:35 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசியல் பிரமுகர் வீட்டில், 64 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாஸ்பேட்டை, தாகூர் நகர், 11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புரந்தரதாசன். அரசியல் இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டில், இரு தினங்களுக்கு முன், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில், ஒரு பெண் அதிகாரி தலைமையில், 6 பேர் கொண்ட வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி., அதிகாரிகள், புரந்தர தாசன் வீட்டில் இருந்த, 64 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் குறித்து விசாரித்தனர். இத்தொகை கடந்தாண்டு, நிலம் விற்பனை செய்ததின் மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர்.
மேலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் பணத்தை பதுக்கி வைத்திருக்கக்கூடாது எனக் கூறி, 64 லட்சத்து 60 ஆயிரத்தை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பிரதான சாலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
தேர்தல் துறை அதிகாரி சண்முகவேல் தலைமையிலான குழுவினர், அங்கு சென்று பைக்கில் சென்று கொண்டிருந்த, 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அவர்கள், 500 ரூபாய் நோட்டுகள் 25 ஆயிரம் வைத்திருந்தனர்.
விசாரணையில், அவர்கள் அதேப் பகுதியை சேர்ந்த சக்திகுமார், தருமன் என தெரிந்தது. பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததும் தெரிய வந்தது. அவர்கள், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த, 25 ஆயிரம் பணத்தை தேர்தல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த, அரசியல் கட்சியை சேர்ந்த மேலும், 2 பேரை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

