தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காலாவதியான செக் கொடுத்து ரூ.6.5 லட்சம்  மோசடி

காலாவதியான செக் கொடுத்து ரூ.6.5 லட்சம்  மோசடி

காலாவதியான செக் கொடுத்து ரூ.6.5 லட்சம்  மோசடி


ADDED : ஜூலை 28, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: போலி செக் கொடுத்து எலக்ட்ரிக் கடை உரிமையாளரை  ஏமாற்றியவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முத்திரைப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிராஜா,71;  இவர்  அதே பகுதியில் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும்,  புதுச்சேரி அண்ணா சாலை, கொசக்கடை வீதி சந்திப்பில், எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும்,  காந்தி வீதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், சரவணன், பழனிராஜாவிடம் அடிக்கடி பணம் வாங்கி சரியாக திருப்பி தந்துள்ளார்.  கடந்த 2024 ஜூன் மாதம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட காரணங்களை கூறி பழனிராஜாவிடம், சரவணன் 5 லட்ச ரூபாய் கடனாக பெற்றார்.

 ஆனால், அவர் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை முறையாக திருப்பி செலுத்தவில்லை. இந்நிலையில்,  கடந்த ஆண்டு, புதுச்சேரி சட்ட உதவி மையத்தில், சரவணன், பழனிராஜாவிடம், பணத்தை கொடுத்து விட்டதாகவும்,  மேலும் அவர் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் புகார் அளித்தார்.

அது போலி புகார் என தெரியவரவே, ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சவரணன் தனது கடையை விற்றுவிடப்போவதாகவும் பத்து நாளில் பணம் வரும் என கூறி அசல், வட்டியுடன் சேர்த்து 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் வங்கியின் செக் ஒன்றை அண்ணா சாலையில் வைத்து, பழனிராஜாவிடம் அளித்தார்.

பத்து நாட்கள் கழித்து, பழனிராஜா செக்கை வங்கியில் செலுத்திய போது,  அந்த வங்கி வேறு ஒரு வங்கியுடன் கடந்த 2021ம் ஆண்டே இணைகப்பட்தும், அவர் கொடுத்தது காலாவதியான போலி செக் எனவும் தெரிந்தது.

பழனிராஜா கொடுத்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us