/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மெடிக்கலில் ரூ.8.70 லட்சம் கையாடல்
/
மெடிக்கலில் ரூ.8.70 லட்சம் கையாடல்
ADDED : மார் 01, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஏம்பலம், டி.வி.நகரைச் சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.
இவரது கடையில் கடலுார் மாவட்டம், நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவர் வேலை செய்து வருகிறார்.
பச்சையம்மாள் ஏம்பலத்தில் வீடு கட்டி வருவதால் சரியாக மெடிக்கலுக்கு வருவதில்லை.
இந்நிலையில், கடையில் இருந்து 8.70 லட்சம் ரூபாய் வரை பவித்ரா கையாடல் செய்துள்ளதாக, பச்சையம்மாள் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.