/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 பேரிடம் ரூ.15.23 லட்சம் 'அபேஸ்'
/
3 பேரிடம் ரூ.15.23 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஆக 16, 2024 10:58 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேரிடம் 15.23 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பின்னாச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், தொலை தொடர்பு துறை அதிகாரி பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். உங்கள் மீது துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், மொபைல் மற்றும் ஆதார் எண்களை பிளாக் செய்துள்ளதாவும், இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டுமானால், அபராத தொகை செலுத்த வேண்டும் என்று, கூறினார். அதை நம்பிய, ரமேஷ் 14.90 லட்சம் ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அனுப்பி ஏமாந்தார்.
நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் வங்கி கணக்கில் இருந்து 16 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். இவர், லேப்டாப் உதிரிபாகங்கள் வாங்குவதற்கு ஆடர் செய்து, ஆன்லைன் மூலம் 17 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
இது குறித்து மூவர் அளித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர்.