ADDED : மார் 23, 2024 11:36 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் 99 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி பாலாஜி என்பவர் ஆன்லைன் மூலம் வந்த விளம்பரத்தை பார்த்து, பழைய பிரிண்டிங் மெஷின் வாங்குவதற்கு ரூ.7 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமார்ந்தார்.
அதேபோல், பாவனாசோழன் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். வங்கி கணக்கில் பணம் குறைவாக உள்ளதாக அதற்கு 22 ஆயிரம் கொடுத்தால், 44 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்.
அதை நம்பி, அவர் 22 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமார்ந்தார்.
யோகேஷ் ஜெயின் என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை போலீஸ் அதிகாரி எனவும், தங்கள் மகளை கைது செய்துள்ளதாக, விடுக்க வேண்டும் என்றால், பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், அந்த நபர் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமார்ந்தார்.
பிரசாந்த் பாண்டே என்பவரின், வங்கி கணக்கில் இருந்து, ஐ.எம்.பி.எஸ்., மூலம் 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
நால்வரும் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

