/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., குடும்ப விழா
/
கிருமாம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., குடும்ப விழா
ADDED : பிப் 25, 2025 04:44 AM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர். எஸ். எஸ்.,) சார்பில் குடும்ப விழா நேற்று நடந்தது.
கிருமாம்பாக்கம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் நடந்த ஆர். எஸ். எஸ்., குடும்ப விழாவில், மாநில தலைவர் அரவிந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக மாநில இணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத் பங்கேற்று பேசினார்.
விழாவில், குழந்தை குடும்ப மரபுகள், இதிகாச கதைகள், நெறிமுறைகள், நெறிகள் மற்றும் மதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளாமானோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.