/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் 'அட்வைஸ்'
/
விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் 'அட்வைஸ்'
விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் 'அட்வைஸ்'
விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: போக்குவரத்து இன்ஸ்பெக்டர் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 23, 2024 02:24 AM

புதுச்சேரி : சிக்னல்களில் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன் பேசினார்.
புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையங்களில் சிறுவர் போக்குவரத்து பிரிவு இயங்கி வருகின்றது. இதன் வாயிலாக பள்ளி மாணவர்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
கிழக்கு எஸ்.பி., செல்வம் உத்தரவின்பேரில் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இப்பிரிவு மாணவர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி பேசியதாவது:
சிக்னல்களில் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிவப்பு லைட் எரிந்தால் நிற்க வேண்டும். மஞ்சள் லைட் எரிந்தால் கவனிக்க வேண்டும்.
பச்சை லைட் எரிந்தால் மட்டுமே புறப்பட வேண்டும். பஸ் படிக்கட்டுகளில் பயணிக்க கூடாது. இது ஆபத்தானது. பைக்குகளில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்.
உயிர்களை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும்போது உடனடியாக வழிவிட வேண்டும். ஜீப்ரா கிராசிங்கில் மட்டுமே பாதசாரிகள் சாலையை கடக்க வேண்டும்.
சென்டர் மீடியன் வழியாக சாலையை திடீரென கடக்க கூடாது. இது விபத்தினை ஏற்படுத்தி விடும் என பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சப் இன்ஸ்பெக்டர் அப்துல் கரீம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.