/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி தொகுதியில் ஊரக வேலை திட்ட பணிகள்
/
மணவெளி தொகுதியில் ஊரக வேலை திட்ட பணிகள்
ADDED : மார் 03, 2025 03:55 AM
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில், ரூ.15.86 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் மதிப்பில், ஆண்டியார்பாளையத்தில், காட்டுப்பாளையம் முதல் உப்பனாறு வரை துார்வாரி ஆழ்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து ரூ.7.33 லட்சம் மதிப்பீல், டி.என்., பாளையம், மதிகெட்டான் வாய்க்கால் துார் வாரும் பணியையும், ரூ.3.03 லட்சம் மதிப்பில் நோணாங்குப்பம் டோல்கேட் அருகே குள்ளகவுண்டர் தோப்பு வாய்க்கால் துார் வாரும் பணி என, மொத்தம் ரூ.15.86 லட்சம் மதிப்பிலான பணிகளை சபாநாயகர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.