ADDED : மே 15, 2024 11:48 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 லிருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் முழுநேர தினக்கூலி மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் சம்பளம் திருத்தியமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, முழுநேர தினக்கூலி ஊழியர்களுக்கான (பிரிவு 1,2,3) சம்பளம் ரூ.876-ல் இருந்து ரூ.900 ஆகவும், பிரிவு-4 ஊழியர்களுக்கு ரூ.968ல் இருந்து ரூ.995 ஆகவும், பிரிவு-5 ஊழியர்களுக்கு ரூ.1,241-ல் இருந்து ரூ.1,275 ஆகவும், பிரிவு-6 ஊழியர்களுக்கு ரூ.1,421-ல் இருந்து ரூ.1,460 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் அரசின் பகுதிநேர தினக்கூலி ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.13 ஆயிரத்து 140ல் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசு சார்பு செயலர் (நிதி) சிவக்குமார் பிறப்பித்துள்ளார்.