/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் வைக்கும் பணத்தில் கல்வி உதவி தொகை ரங்கசாமிக்கு சாமிநாதன் கோரிக்கை
/
பேனர் வைக்கும் பணத்தில் கல்வி உதவி தொகை ரங்கசாமிக்கு சாமிநாதன் கோரிக்கை
பேனர் வைக்கும் பணத்தில் கல்வி உதவி தொகை ரங்கசாமிக்கு சாமிநாதன் கோரிக்கை
பேனர் வைக்கும் பணத்தில் கல்வி உதவி தொகை ரங்கசாமிக்கு சாமிநாதன் கோரிக்கை
ADDED : ஜூலை 21, 2024 05:46 AM
புதுச்சேரி: 'தனது பிறந்த நாளுக்கு கட் அவுட், பேனர்கள்வைக்க செலவிடும் பணத்தை,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்க, ஆதரவாளர்களிடம் முதல்வர் அறிவுறுத்த வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து கட் அவுட், பேனர்களை முதல்வரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் வைத்து வருகின்றனர்.
கோடிக்கணக்கான ஏழை மாணவர்கள் படிப்பதற்காக, ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கிய பெருமை முன்னாள் முதல்வர் காமராஜரையே சாரும்.காமராஜரை பின்பற்றும் முதல்வர் ரங்கசாமி, தனது தொண்டர்களிடம், பேனர், கட் அவுட் வைக்க செலவிடும் பணத்தை ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவிட வலியுறுத்த வேண்டும்.
உயர் கல்வி படிக்கஇடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல், படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலையில் நிறைய மாணவர்கள் உள்ளனர்.தொழிலாளர்கள் மற்றும் தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு, தனது பிறந்தநாள் பரிசாக, கட் அவுட், பேனர் வைக்கும் பணத்தை வழங்க முதல்வர் அறிவுறுத்த வேண்டும்.
பேனர் இல்லாத அழகிய புதுச்சேரியை உருவாக்க முதல்வர் முதல் முயற்சியை எடுக்க வேண்டும்.இதை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
கட் அவுட் மற்றும் பேனர்கள் விஷயத்தில் ஐகோர்ட் தீர்ப்பை நேர்மையான அதிகாரிகள் அமல்படுத்த முன் வரும்போது, அவர்களுக்கு அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதிகாரிகளால் தங்களது கடமையை செய்ய இயலவில்லை. அவர்களுக்கு புதுச்சேரி அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.