/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சம்பந்தன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
/
சம்பந்தன் மறைவு கவர்னர், முதல்வர் இரங்கல்
ADDED : ஜூலை 02, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இலங்கை அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவுக்கு, கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ராதாகிருஷ்ணன்: இலங்கை தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு உலக தமிழ் இனத்திற்கு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி: இலங்கை தமிழர்களின் எதிர்காலம் அமைதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையவும், சம உரிமை கிடைத்திட இலங்கை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் மறைவு செய்தி மிகுந்த மன வருத்தத்தையும், வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.