/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வீடுகளுக்கு வழங்கவேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : ஆக 13, 2024 05:03 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்.
நகராட்சி ஊழியர்களுக்கு அரசு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இட பற்றாக்குறையால் தவிக்கும் பெரியக்கடை போலீஸ் மற்றும் கிழக்கு எஸ்.பி.,க்கு தனி தனி அலுவலகம் அமைக்க வேண்டும். சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களை அமைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரிவில் தமிழ் தெரிந்த எஸ்.பி.,க்களை நியமிக்க வேண்டும். ஆற்றில் வரும் நீர் கடலில் கலந்து வீணாகுவதை தடுக்க கூடுதலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
முதலியார்பேட்டை முழுதும் குடிநீர் 2000 டி.டி.எஸ்., அளவுக்கு மேல் உள்ளதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இப்பகுதியில் நல்ல குடிநீர் வழங்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வீடுகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டம் அறிவிக்க வேண்டும்.
விஷவாயு தாக்கும் அச்சம் இருப்பதால், அனைத்து பகுதியிலும் பாதாள சாக்கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் பல பதவிகள் காலியாக இருப்பதால், நீதிமன்ற பணிகள் பெரும் தொய்வு ஏற்படுகிறது. பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என பேசினார்.