/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேபிள் டிவிக்களை அரசு உடமையாக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
கேபிள் டிவிக்களை அரசு உடமையாக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கேபிள் டிவிக்களை அரசு உடமையாக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
கேபிள் டிவிக்களை அரசு உடமையாக்க வேண்டும் சம்பத் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 06:39 AM
புதுச்சேரி : கவர்னர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது:
534 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது கிராமப் பகுதியில் உள்ள 5 ஏரிகளில் இருந்து நகர பகுதிக்கு குழாய் மூலமாக குடிநீர் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள்.
புதுச்சேரி மையப் பகுதியில் உள்ள கனக்கன் ஏரி, வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கம்பாக்கம் ஏரியை ஆழப்படுத்துவது குறித்தோ, மழைநீர் சேகரிப்பது குறித்தோ ஏன் அரசு யோசிக்கவில்லை. கிராமப் பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
எப்படி திட்டத்தை செயல்படுத்த போகிறீர்கள்.
நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
ராஜிவ் சதுக்கத்தில் இருந்து இந்திரா சதுக்கம் வரை உயர்மட்ட மேம்பாலம் மற்றும் கடலுார் சாலை விரிவாக்கம் பணி ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த 15 வது சட்டசபை முதல் கூட்டத்தொடரில் 400 கோடி செலவில் புதிய சட்டசபை வளாகம் கட்டப்படும் என்று தெரிவித்தீர்கள், ஆனால் இதுவரை எந்த வேலையும் தொடங்கவில்லை.
எனவே இந்த மேம்பால திட்டத்தையும் சாலை விரிவாக்கதையும் அறிவிப்போடு நிறுத்தி விடாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருவாய் பெருக்க கேபிள் டிவிக்களை தமிழகத்தில் உள்ளதை போல் அரசு உடமை ஆக்க வேண்டும். அரசு இது தொடர்பாக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.